கட்சித் தலைவர் பதவி பர்வேஸ் முஷாரப் ராஜினாமா
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது ஊழல், கொலை வழக்குகள் வழக்குகள் உள்ளன. பாகிஸ்தானில் இருந்து தப்பிய முஷாரப் லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள பாகிஸ்தான் தேர்தலில் சிட்ரல் தொகுதியில் போட்டியிட நீதிமன்ற அனுமதியின்பேரில் முஷாரப் மனு தாக்கல் செய்தார். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் முஷாரப்புக்கு மனு தாக்கல் செய்ய கொடுத்த அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், முஷாரப்பின் மனுவை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்துகொண்டு கட்சியை நடத்துவது சாத்தியமல்ல என்பதால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் கமிஷனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அம்ஜத், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.