EBM News Tamil
Leading News Portal in Tamil

2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக மனித உரிமை மீறல் : ஐநா அறிக்கைக்கு இந்தியா மறுப்பு

2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக தங்களது வலுவைப் பிரயோகித்து நிறைய அப்பாவி பொதுமக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது ஆகவே இது குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியப்பகுதி காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் நிலவரங்கள் குறித்து ஐநா அறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தி அமைதி மார்க்கத்தில் போராடும் போராளிகளையும் கைது செய்யும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று ஐநாவின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
ஐநாவின் அறிக்கைக்கு இந்தியா உடனடியாக தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளது, தவறானது, திட்டமிடப்பட்டது,
ஐநா மனித உரிமை அமைப்புத் தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன், ஜூலை 2016க்குப் பிறகு நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை தேவை. பெலட் துப்பாக்கிகள் மூலம் நிறைய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதோடு, அளவுக்கதிகமாக வலுவை இந்தியா பயன்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார். மேலும் காஷ்மீர் நிலரவம். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவைக்கைகள் குறித்து ஒட்டுமொத்த பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார்.
காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, காரணம் 1990-ம் ஆண்டு சட்டம் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குகிறது என்று ஐநா அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ’
ஐநா விசாரணைக் கமிஷன் என்பது ஐநாவின் உயர்மட்ட விசாரணையாகும். பொதுவாக சிரியா போன்ற பலதரப்பட்ட சிக்கல்கள் உள்ள இடங்களுக்குத்தான் ஐநா விசாரணைக் கமிஷன் பொருந்தும்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை வேறுபட்டதாகவும் வேறு அளவிலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியான வழியில் எதிர்ப்பவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது, இதுவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐநா அறிக்கை கூறுகிறது.