தலாய் லாமாவுக்கு புற்றுநோய்
வாஷிங்டன்: தலாய் லாமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 81 வயதாக தலாய்லாமா இரண்டு ஆணடுகளால் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சீனாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக அவரது பயணம் குறைந்து உள்ளதாகவும், அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய திபெத்திய நிர்வாகம் இதைமறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. வயோதிகம் காரணாக ஏற்பட்டுள்ள உடல் நல பாதிப்புகளே தவிர கவலையளிக்கும் நோய் பாதிப்பு எதுவும் தலாய் லாமாவுக்கு இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,