ஆப்கனில் தலிபான் தாக்குதல்: 15 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
ஆப்பானிஸ்தானில் தலிபான் நடத்திய தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
ஆப்பானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள ஆக் திப்பா பகுதியில் சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் ஒருங்கிணைந்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.