Ultimate magazine theme for WordPress.

இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக நகை வியாபாரி நிரவ் உள்ளிட்ட 25 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, இங்கிலாந்து அரசிடம் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டன் உள்துறை அலுவலகம் கூறுகையில், தனிநபர் வழக்கு குறித்து விபரம் ஏதும் அளிக்கப்படவில்லை. நிரவ் மோடி எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும், நிரவ் மோடி தற்போது லண்டனில் இப்பதாகவும், அவர் அந்நாட்டு அரசிடம் அரசியல் தஞ்சம் புக உதவி கேட்டுள்ளதாகவும் பினான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரவ் மோடியை இதுவரை கைது செய்யாதது குறித்து பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நிரவ் மோடியை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்காக சட்ட அமலாக்கத்துறையின் பதிலுக்காக இந்திய அரசு காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசு இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.