EBM News Tamil
Leading News Portal in Tamil

ட்ரம்புக்கு கடிதம் அனுப்பிய கிம்

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அதிபர் கிம் அளித்த கடித்தத்தை அந்நாட்டு உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சோல் ஒப்படைந்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
இந்நிலையில், வடகொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சோல் நியூயார்க் சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் போம்பியோவை சந்தித்தார். அப்போது, ட்ரம்ப்-கிம் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவின் உயர் அதிகாரி ஒருவர் அமெரிக்கா சென்றது இதுவே முதல்முறை.
இந்த சந்திப்பில் கிம் ட்ரம்புக்கு எழுதிய கடித்தத்தை சோல் ஒப்படைந்திருக்கிறார். அந்தக் கடித்தத்தில் கிம் என்ன குறிப்பிட்டுள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ட்ரம்ப் – கிம் இடையே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது உலக நாடுகளுக்கிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.