Ultimate magazine theme for WordPress.

கனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு!

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்!
கனடா நாட்டில் ஒன்டாரியோ நகரிலுள்ள மிச்சிசாகுவா பகுதியில் ஷாப்பிங் மால் ஒன்றில் ‘பாம்பே பேல்’ என்று இந்திய உணவகம் ஓன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களின் புகைப்படமானது அங்கு பொருத்தியுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவகத்திற்கு வந்த இரண்டு நபர்கள் உணவகத்திற்கு குண்டு வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இது போன்று கடந்த மாதம் டொரான்டோவில் வேன் ஒன்றை மோதச் செய்து ரெஸ்டாரண்டில் 10 பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!

Leave A Reply

Your email address will not be published.