EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார் | U.S. Former President Jimmy Carter passed away at 100


வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு அதிபர் பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றவர் ஜிம்மி கார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயி டூ அமெரிக்க அதிபர்: 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் அமெரிக்க அதிபராக இருந்தார். அமெரிக்காவின் 39வது அதிபராக இவர் பதவி வகித்தார். விவசாய பின்னணி கொண்ட இவர் ஜாஅர்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு கிடைத்த மக்கள் அபிமானத்தால் ஜார்ஜியா மாகாண ஆளுநர் தொடங்கி அமெரிக்க அதிபர் வரை உயர்ந்தார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அவரது 100வது பிறந்தநாள் குடும்பத்தினர், நண்பர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவர் வயது மூப்பு தொடர்பான உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பைடன் புகழஞ்சலி: ஜிம்மி கார்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், “அமெரிக்காவின் இளம் தலைமுறையினரே நீங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் என்னவென்ற தேடுதலில் இருந்தால், ஜிம்மி கார்டரைப் படியுங்கள். அவர் நம்பிக்கையும், எளிமையும், கோட்பாடுகளும் நிறைந்த மனிதர்.” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு: சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிய பல தசாப்தங்களாக போராடியவர் ஜிம்மி கார்டர். மனித உரிமைகளைப் பேண, பொருளாதார, சமூக வளர்ச்சியை மேம்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதனை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.