EBM News Tamil
Leading News Portal in Tamil

100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ‘பீஸ்ட் கேம்ஸ்’ டி.வி. தொடர் நிகழ்ச்சி – வெற்றி பெறும் நபருக்கு தீவு பரிசு | MrBeast Beast Games Sets New Record


உலகிலேயே மிக அதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் நடத்தப்படும் ‘பீஸ்ட் கேம்ஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெறும் நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசுடன் தனியார் தீவு ஒன்றும் பரிசளிக்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஸ்க்விட் கேம் டி.வி தொடர் 22 மில்லியன் டாலர் செலவில் நடத்தப்பட்டது. இதேபோல் கேம் ஆப் த்ரோன்ஸ் டி.வி நிகழ்ச்சிக்கு 50 மில்லியன் டாலர் செலவானது. ‘தி லாஸ்ட் ஆஃப் அஸ்’ என்ற நிகழ்ச்சிக்கு 90 மில்லியன் டாலர் செலவானது. தற்போது அதைவிட அதிகமாக 100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ‘பீஸ்ட் கேம்ஸ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி வெளிவந்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 19-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் டி.வி. தொடரை மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன் உருவாக்கியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 1,000 பேர் பங்கேற்று 5 மில்லியன் டாலர் பணத்துக்காக பல சவால்களை சந்தித்து போட்டியிடுகின்றனர். இத்தொடரின் முதல் சீசனில் 10 பாகங்கள் வாரந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு பாகத்திலும் ஒருவர் ரூ.80,000 டாலர் பணத்துடன் வெளியேற்றப்படுகிறார். இந்நிகழ்ச்சியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசுடன் ஒரு தனியார் தீவும் பரிசளிக்கப்படுகிறது.