லண்டன்: ‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் (Professor) ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். ஹாரிபாட்டர் கதையை அடிப்படையாக கொண்டு வெளியான 8 படங்களில் 6-ல் இவர் நடித்துள்ளார். நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.