EBM News Tamil

“என்னை கூப்பிடவே இல்லை”.. மறக்க முடியாமல் தவித்த கெயில்.. கோலி டீமை வெளுத்து வாங்கியது ஏன்.. பின்னணி

0

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிராக பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் நேற்று ஆடிய ஆட்டம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. யுனிவர்ஸ் பாஸ் இஸ் பேக்.. இணையம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது கூறி வரும் ஒரே வாசகம் இதுதான். ஐபிஎல் தொடரின் கிங்காக வலம் வந்த கெயில் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டார். எப்படி சென்றாரோ அப்படியே மீண்டும் திரும்பி வந்துள்ளார் கெயில். ஒன்றரை வருடமாக மைதானம் பக்கமே செல்லவில்லை என்றாலும் அதே பார்மோடு, கொஞ்சம் கூட வேகம் குறையாமல் நேற்று பஞ்சாப் அணிக்காக ஆடினார். பஞ்சாப் அணிக்காக நேற்று ஒன் டவுன் இறங்கிய கெயில் 45 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்.

நேற்று போட்டியில் அரை சதம் அடித்த இவர் 5 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். ஒரு வருடம் கழித்து பேட்டிங் இறங்கிய கெயில் அதற்கான எந்த சுவடும் இன்றி முதல் போட்டியிலேயே மாஸ் ஆட்டம் ஆடினார். அரை சதம் அடித்துவிட்டு, தான்தான் பாஸ் என்பதை நிரூபித்தார். தனது பேட்டில் இருந்த தி பாஸ் வாசகத்தை உயர்த்தி காட்டி.. விமர்சனங்களுக்கு எல்லாம் ஒரே மேட்சில் பதிலடி கொடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.