EBM News Tamil

போய்ட்டாரே வெற்றி.. எல்லாத்துக்கும் காரணம் “அந்த ஆபீஸ்”தான்.. அலற வைக்கும் அமமுக சென்ட்டிமென்ட்..!

0

சென்னை: “வெற்றி வெற்றி என வாய் நிறைய இனி யாரை அழைத்து பேச போகிறேன் என்று டிடிவி தினகரனின் கதறல் அத்தனையும் உண்மை.. கடைசி வரை தினகரன் மீது இம்மியளவும் நம்பிக்கையை இழக்காத விசுவாசி வெற்றிவேல் என்று அமமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர்.

கட்சியில் வலுவான இடத்தில், அதிகாரமிக்கவராக ஒரு மூத்த தலைவர்களை பார்க்கும்போது, பெரிதாக எந்த பலவீனமான எண்ணமும் நமக்கு வருவதில்லை.. ஆனால், உடல்நலம் குன்றியது என்ற செய்தி வரும்போதுதான், அவர்களை பற்றின நல்லவைகளும் நம் கண் முன்னால் விரிந்துவிழும்.. அப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் அமமுகவின் வெற்றிவேல்.

அமமுகவினர் சிலரிடம் பேசினோம்… அவர்கள் சொன்னதாவது: “மனசில எதையும் வெச்சுக்க மாட்டார்.. தப்புன்னா அதை உடனே கேட்டுடுவார்.. பக்கத்தில யார் யார் இருக்காங்க, இப்போ சொல்லலாமா? வேணாமா என்ற தயக்கமே இருக்காது.. அப்படியே போட்டு உடைச்சிடுவார்.. எப்பவுமே உண்மையின் பக்கம் நிற்கணும் என்று அட்வைஸ் தந்து கொண்டே இருப்பார்.

வெற்றி.. வெற்றி என்று யாரை இனி உரிமையாக பேசி அழைக்க போகிறேன் என்று தினகரன் சொல்கிறார் என்றால் அந்த அளவுக்கு தினகரன் மீது வெற்றிவேல் நம்பிக்கை வெச்சிருந்தவர்.. அதுக்கு காரணம், ஜெயலலிதாவை ஆர்கேநகரில் வெற்றி பெற வெச்ச மாதிரியே, தினகரனையும் வெற்றி பெற வைத்து ஆபரேஷனை சக்சஸ் செய்து காட்டியதுடன், திமுக, அதிமுகவை அலற வைத்ததுதான்.

Leave A Reply

Your email address will not be published.