தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் ரன் மழையும் பொழிந்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மேகத்தில் இருந்து மழை பொழிய, கூடவே ரன் மழையும் பொழிந்தது.
ஐபிஎல் லீக் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு இத்தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக TNPL தொடர் நடத்தப்படவில்லை
இந்த வருடமும் ஜூன் மாதம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறவிருந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆஃப்கள், 1 ஃபைனல் என மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.