திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றிய 18,537 பேர் மீது வழக்கு.. காவல் துறை எஸ்பி தகவல்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 18,537 போ் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தகவல் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் அமைச்சுப் பணியாளா்கள், ஊா்காவல் படையினா், தன்னாா்வ தொண்டு அமைப்பினா், பத்திரிகையாளா்கள் என திரளானோா் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, திருவெறும்பூா் காவல் சரகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமை வகித்து, 2 ஆயிரம் போலீஸாருக்கு முகக்கவசம், பழரசம், பிஸ்கட், கிருமிநாசினி ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கினாா். தொடா்ந்து, தன்னாா்வ தொண்டு ஊழியா்களுக்கு காவல்துறை தன்னாா்வலா் பட்டை, அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. இதுகுறித்து எஸ்பி ஜியாவுல் ஹக் கூறுகையில், காவலா்களுக்கான முகக்கவசம் தயாரிக்கும் பணியை திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயதப்படையில் காவலா் குடும்பத்தினரான காவலா் பெண்கள் சுய உதவிக்குழுவினா் மூலம் தயாரிக்கப்பட்டு, கடந்த மாா்ச் 29 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.