“மன்னிச்சிருங்க ஆச்சி.. என்னால முடியலை”.. கிணற்றில் விழுந்த மாரியம்மாள்.. 18 வயசுதான்.. கொடுமை!
தென்காசி: “நானும் ரொம்ப முயற்சி பண்ணேன்… என்னால முடியல..மன்னிச்சிருங்க ஆச்சி” என்று இளம்பெண் ஒருவர் லட்டர் எழுதி வைத்து விட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இது சங்கரன்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாவலியூத்து கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மாடசாமி – மருதக்கனி… இவர்களுக்கு மாரியம்மாள் என்ற மகளும், விக்னேஷ், மகாராஜன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மூத்த மகள் மாரியம்மாளுக்கு 18 வயதாகிறது.. சங்கரன்கோவிலில் தன் பாட்டி வீட்டில் தங்கி வந்திருக்கிறார்.. அங்கிருந்தபடியே டைப்ரைட்டிங் கோர்ஸும் படித்து வந்தார்!!
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சாமி கும்பிடுவதற்காக பாபநாசத்தில் உள்ள கோயிலுக்கு பாட்டி சென்றிருந்தார்.. இரவு 9 மணிக்குதான் வீடு திரும்பி இருக்கிறார்.. அப்போது மாரியம்மாள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மாரியம்மாளை பற்றி விசாரித்தார்.. பல இடங்களிலும் தேடினார்… எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மாரியம்மாளும் கிடைக்கவில்லை.. மறுநாள் காலை அந்த ஊரில் உள்ள கிணற்றில் மாரியம்மாள் பிணமாக கிடந்ததை பார்த்து பாட்டி கதறி துடித்தார்.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மாரியம்மாளின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.. அப்போதுதான் வீட்டிற்குள் மாரியம்மாள் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், “நான் எவ்வளவோ படிச்சு பார்த்தேன்.. முடிந்த அளவுக்கு படிச்சு பார்த்தும் என்னால முடியவில்லை ஆச்சி… என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது… மாரியம்மாள் எந்த தேர்வை சொல்கிறார் என தெரியவில்லை.. தற்கொலை செய்து கொண்ட தினத்தில் டைப்ரைட்டிங் தேர்வு முடிவு வந்திருக்கிறது.. அநேகமாக இதில்தான் அவர் தோல்வி அடைந்து மனமுடைந்து தற்கொலை செய்திருக்காலம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டைப்ரைட்டிங் தேர்வின் தோல்விக்காக பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரிய அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது… எனினும் மாரியம்மாள் மரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.