எப்படி இப்படி டான்ஸ் ஆடுறீங்க.. தென்னிந்திய நடிகரின் நடனத்தை பார்த்து வியந்த திஷா பதானி!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா பாடல் நடனத்தை பார்த்து அசந்து போயுள்ளார் பாலிவுட் நடிகை திஷா பதானி.
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அலா வைகுந்த புறமுலோ படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் 91 மில்லியன் வியூஸ்களை கடந்து இந்தியளவில் வைரலானது.
பாம்ஷெல் பாலிவுட்டின் பாம்ஷெல் நடிகையாக வலம் வரும் திஷா பதானி, நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மலங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த படத்தில், கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத அளவுக்கு நடிகை திஷா பதானி, எந்த அளவுக்கு தாராளம் காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு தாராளம் காட்டி நடித்திருந்தார்.
உள்ளாடையுடன் படத்தில் மட்டுமின்றி, ரியலிலும், உள்ளாடை அணிந்து அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் போட்டோக்கள் போட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். எப்போ பார்த்தாலும், கெல்வின் க்ளெய்ன் உள்ளாடைக்கு விளம்பரம் கொடுப்பது போலவே போஸ்ட் போடுறீங்க என்றும், நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.