அமேசான் மூலம் PM Care Fund-க்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு கூடுதலாக 10 % நிதி பங்களிப்பு..!
பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அமோசன் தளத்தில் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் நிதி பங்களிக்கப்படும்.
நாம் அனைவரும் கடினமான சூழலில் வாழ்கிறோம். COVID-19 தொற்றுநோய் நம் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது, மேலும் உலகளாவிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலர் தங்களது வீட்டிலிருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும், எனினும் அதில் பலர் நாம் பாதுகாப்பாக இருபதற்கும் நோயை வென்றெடுக்கவும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
இப்போது பெரிய கேள்வி என்னவென்றால், மருத்துவர்கள், காவலர்கள், விநியோக முகவர்கள் மற்றும் பலர் நம்மை பாதுகாக்க முயற்சிக்கும்போது, நாம் என்ன ஒற்றுமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவ முடியும்?
இதுபோன்ற சோதனை காலங்களில், ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து நம் பங்குகளை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் சிரமப்படுவதோடு வேலை இழக்கும்போது, நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
உங்கள் பங்களிப்பை செய்வதன் மூலம்.
Amazon.in இன் புதிய முயற்சியால் உங்கள் நன்கொடைகளை நேரடியாக COVID-19 போன்ற தேசிய அவசரநிலைகளுக்கு பயன்படுத்தப்படும் PM Care Fund-க்கு அனுப்ப இயலும். PM Care Fund-க்கு உங்கள் நன்கொடைகளை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் யுபிஐ பயன்டுத்தி உங்கள் வங்கி கணக்கு மூலம், பாதுகாப்பாக அனுப்பலாம்.உங்கள் நன்கொடைகள் தேசம் இப்போது பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அத்தியாவசிய பொருட்களுக்கான பணத்தை திரட்ட உதவும், மேலும் பலரின் வாழ்விற்கு நன்மைகள் கிட்டும். கூடுதலாக, Amazon தனது தளத்தின் மூலம் ஒவ்வொரு நன்கொடை செலுத்துதலுக்கும் அதாவது ஒரு நன்கொடையாளருக்கு ஒரு முறை கூடுதலாக 10% பங்களிக்க பொறுப்பேற்றுள்ளது. இந்த 6 எளிய படிகள் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.