EBM News Tamil
Leading News Portal in Tamil

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுககு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுவதாக தி மொபைல் இந்தியன் வலைதளத்தில் அறிவிப்பு தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஆனது சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் சில பிழைத் திருத்தங்களுடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 ஐக் கொண்டுவருகிறது.

தற்சமயம் போலந்தில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது, கூடிய விரைவில் இந்தியாவில் இருக்கும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 34ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கருப்பு, தங்கம் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.