சில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தங்களது வாடிக்கையாளருக்கு வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கும், வீட்டில் இருந்தே பணி புரிபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவந்த அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் 100நிமிட இலவச அழைப்புகள் மற்றும 100எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என்றும், இந்த நன்மைகள் வரும் ஏப்ரல் 17வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜியோபோன் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலாவதியான பிறகும் கூட இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஏராளமான பயனர்கள் தற்போது உள்ளனர் என்றும் இந்த டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நாட்களில் வாடிக்கையாளர்கள் சில்லறை கடைகள் வழியாக ரீசார்ஜ் செய்வது மிகவும் கடினம், எனவே இதை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் போன்ற ரீசார்ஜ் செய்வதற்கு மாற்று சேனல்களை வழங்கியுள்ளது.
ஆனாலும் கூட சில பயனர்களார் தங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், ஜியோ அறிவித்துள்ள இலவச 100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்கள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் உதவியாக இருக்கும்.