EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் | moto g06 smartphone launched in india at budget price specs


Last Updated : 11 Oct, 2025 02:14 PM

Published : 11 Oct 2025 02:14 PM
Last Updated : 11 Oct 2025 02:14 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. கொரில்லா கிளாஸ் 3 பினிஷிங், டால்பி ஸ்பீக்கர்ஸ், ஐபி64 வாட்டர் ரெஸிஸ்ட்னஸ் ரேட்டிங் போன்றவற்றை இந்த போன் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது சரியான சாய்ஸாக அமைந்துள்ளது. சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.88 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 7,000mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 4 வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.7,499 முதல் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!