EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oppo f31 smartphone launched in india price specs


சென்னை: ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘F’ சீரிஸ் போன்களின் வரிசையில் F31 வெளிவந்துள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போனுடன் F31 புரோ+, F31 புரோ உள்ளிட்ட போன்களும் வெளிவந்துள்ளன.

ஒப்போ F31 சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 + 2 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 7000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட்
  • இந்த போனின் விலை ரூ.22,999 முதல் தொடங்குகிறது