EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | google pixel 10 series smartphone launched in india price specs


சென்னை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். இது கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 9 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது.

கடந்த 2016 முதல் கூகுள் பிக்சல் போன்களை கூகுள் நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிய மாடல் ‘கூகுள் பிக்சல்’ போன்களை சந்தையில் கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளன. பிக்சல் வாட்ச் 4 மற்றும் பிக்சல் பட்ஸ் 2a-வும் இதோடு அறிமுகமாகி உள்ளன.

வழக்கம் போலவே ஆண்டுதோறும் நடைபெறும் கூகுளின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகமாகின. அந்த வகையில் கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 புரோ, பிக்சல் 10 புரோ எக்ஸ்எல், பிக்சல் 10 புரோ ஃபோல்ட் போன்கள் அறிமுகமாகி உள்ளன.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் அனைத்தும் டென்சர் ஜி5 ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும், இது அனைத்தும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை கொண்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை உறுதி செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதில் ‘Gemini நானோ’ ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

பிக்சல் 10 புரோ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.3 இன்ச் Actua OLED டிஸ்பிளே
  • 4,970 mAh பெட்டரா
  • 30 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட்
  • 15 வாட்ஸ் வரை வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.79,999
  • 5ஜி நெட்வொர்க்
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
  • இதே போல பிக்சல் 10 புரோ ரூ.1,09,999, பிக்சல் 10 புரோ எக்ஸ்எல் ரூ.1,24,999 மற்றும் பிக்சல் 10 புரோ ஃபோல்ட் ரூ.1,72,999 என இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.