விவோ V60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | vivo v60 smartphone launched in india price features
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘V’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விவோ வி50 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக வி60 வெளிவந்துள்ளது. ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
விவோ வி60 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 பிராஸசர்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- 4 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட்
- 6.77 இன்ச் Curved AMOLED டிஸ்பிளே
- 6,500mAh பேட்டரி
- 90 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்766 Zeiss சென்சார் உடன் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி / 12ஜிபி / 16ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.36,999 முதல் தொடங்குகிறது
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது