EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | infinix gt 30 smartphone launched in india price features


சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் ஜிடி 30 போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிட் செக்மென்ட் விலையில் அறிமுகமாகி உள்ளது. கேமிங் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையிலான அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. பின்பக்கத்தில் கஸ்டமைஸ் செய்யும் வகையிலான எல்இடி லைட்டும் இதில் உள்ளது. ஆர்வமாக கேம் விளையாடும் போது போனின் வெப்பநிலையை செக் செய்யும் வகையில் கூலிங் சிஸ்டம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜிடி 30 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • மீடியாடெக் டிமென்சிட்டி 7400 சிப்செட்
  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 64 + 8 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5500mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 8ஜிபி ரேம்
  • 128 / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • நீலம், பச்சை மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.19,499 முதல்