EBM News Tamil
Leading News Portal in Tamil

ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | redmi note 14 se smartphone launched in india price specs


சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ஏற்கெனவே ரெட்மி நோட் 14 வரிசையில் ரெட்மி நோட் 14 புரோ+, ரெட்மி நோட் 14 புரோ மற்றும் ரெட்மி நோட் 14 மாடல்கள் சந்தையில் வெளிவந்துள்ளன. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட்
  • 50 + 8 + 2 மெகாபிக்சல் என்ற மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 6 ஜிபி ரேம்
  • 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,110 mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.14,999