EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | lave blaze dragon 5g smartphone launched in india price specs


சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் பிராசஸர் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்
  • 4 ஜிபி ரேம்
  • 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5000 mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது