iQOO Z10R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | iQOO Z10R smartphone launched in india price specs
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10R போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10R ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
இந்த போன் iQOO பிராண்டின் ‘Z’ வரிசை போன்களில் ஒன்று. மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைபாஸ் சார்ஜிங் அம்சம் இதில் உள்ளது.
iQOO Z10R ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7400 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. சோனி IMX882 சென்சார் இதில் இடம்பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5700mAh பேட்டரி
- 44 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.19,499 முதல் ஆரம்பமாகிறது