EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | infinix hot 60 5g plus smartphone launched in india budget price


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 60 போனை இந்தியாவில் அந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஏஐ பட்டன், சர்க்கிள் டூ சர்ச் அம்சம், மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 17-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. லாவா ஸ்டார்ம், iQOO Z10 லைட், Poco எம்7 மாதிரியான போன்களுக்கு சந்தையில் இந்த போன் போட்டியாக விளங்கும் என தெரிகிறது. இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.7 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7020 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 5,200 mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வருகிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 6ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.10,499
  • விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது