EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | motorola g96 smartphone launched in india price specs


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோரோலா ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. ஸ்மார்ட் வாட்டர் டச் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஏஐ அம்சங்களும் இதில் உள்ளது. மிட்-செக்மென்ட் விலையில் போனை வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன் பயனர்களை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி96 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.67 இன்ச் FHD+ pOLED 3டி டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் சோனி Lytia 700சி சென்சார் கொண்டுள்ளது பின்பக்கம் உள்ள பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இதில் உள்ளது
  • 5,500mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • ஜூலை 16 முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது
  • நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.17,999 முதல் ஆரம்பமாகிறது