பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | tecno pova 7 5g smartphone launched in india at budget price features
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.
இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 மற்றும் Pova 7 புரோ என இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள Ella ஏஐ அம்சம் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளின் சப்போர்ட்டை கொண்டுள்ளது. டெக்னோ Pova 7 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.78 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- மீடியாடெக் டிரான்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுளள்து செல்ஃபி கேமரா
- 6,000mAh பேட்டரி
- 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.14,999 முதல் ஆரம்பமாகிறது
- டெக்னோ Pova 7 புரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது
- வரும் 10-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது