EBM News Tamil
Leading News Portal in Tamil

சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை – உஷாருங்க உஷாரு..! | be aware of using social media explained


வடிகட்டுங்கள்: நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கிறீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள்.

அதையும் மீறி தேவையற்றவை உங்கள் பக்கத்தில் தென்பட்டால், அவை குறித்துப் புகார் (ரிப்போர்ட்) செய்யுங்கள். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ தவறான சித்திரிப்புகளுடனோ தொழில்நுட்ப உதவியோடு பிறரைத் தொந்தரவு செய்ய முனைவோரை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள் (பிளாக்).

பூட்டுப் போடுங்கள்: பொதுவாக எல்லாவிதமான சமூக ஊடகக் கணக்குகளிலும் ‘பிரை வசி செட்டிங்ஸ்’ இருக்கும். அதனுள் சென்று, உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பிறர் பார்க்காதபடியும் தரவிறக்கம் செய்ய முடியாதபடியும் மாற்றிப் பாதுகாப்பாக வையுங்கள்.

பொதுப் பயன்பாட்டைத் தவிருங்கள்: பொது இடங்க ளிலோ உணவகங்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட கடைகளிலோ ‘வைஃபை’ இணைப்பு இலவசமாகத் தரப்படும். அது போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அத்தியாவசியம் என்றால் ஓரிரு நிமிடங் களில் வெளியேறிவிட வேண்டும். ‘பாஸ்வேர்டு’ பாதுகாப்பு உள்ள செயலிகள், சமூக ஊடகக் கணக்குகளைப் பொது அல்லது தனியார் ‘வைஃபை’ இணைப்பில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

திறப்பது ஆபத்து: உங்களது நண்பர்களிடமிருந்து சந்தேகப் படும்படியான இணைப்பு அல்லது நோட்டிஃபிகேஷன் ஏதேனும் வந்தால், அதைத் திறக்கக் கூடாது. அவர்களது கணக்கை யாராவது ‘ஹேக்’ செய்து அவரது நட்புப் பட்டியலில் உள்ள அனைவரும் இப்படி ‘ஸ்பாம்’ மெசேஜை அனுப்பியிருக்கக்கூடும். அதனால், உங்கள் நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாமல் எதையும் திறக்கக் கூடாது.

ஊர் பெயர் வேண் டாம்: பெரும்பாலான சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் இருக்கும் இடத்தைக் (ஜியோலொகேஷன்) குறிப்பிடச் சொல்லியோ, அதை ‘டேக்’ செய்யச் சொல்லியோ கேட்பார்கள். அதைத் தவிர்த்து விடுவது நல்லது.

நீங்கள் சுற்றுலா செல்லும்போது அந்த இடத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு வேண்டுமானால் குறிப்பிடுங்கள். சில சமூக ஊடகங்கள் உங்களது இருப்பிடத்தைத் தாங்களாகவே ‘டிராக்’ செய்து அதை யாருக்கு வேண்டுமானாலும் பகிரக்கூடும் என்பதால் ‘ஜியோலொகேஷ’னை அணைத்து வைப்பது நல்லது.

கடவுச்சொல்லை மாற்றுங்கள்: எல்லாச் சமூக ஊடகக் கணக்குகளுக்கும் ‘பாஸ்வேர்டு’ எனப்படும் கடவுச்சொல் உண்டு. இதை யாரும் எளிதில் அறியாதபடி சிக்கலானதாக வைக்க வேண்டும். கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கணக்கு, பிறரால் ஹாக் செய்யப் படுவதில் இருந்து இதுதான் தப்பிப்பதற்கான ஒரே வழி.

ஜூன் 30 – சமூக ஊடக நாள்