EBM News Tamil
Leading News Portal in Tamil

கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’ | social medias that helps with education explained


2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது. படிக்கவும், வாசிக்கவும், பொழுதுபோக்கவும் என எல்லா விஷயங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளம் வழியே ஆக்கபூர்வமான விஷயங்களையும் கண்டிப்பாகச் செய்ய முடியும்.

என்ன செய்யலாம்? – ஒரே நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல சமூக வலைதளத்துக்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு. படிப்பு நேரம் முடிந்து உங்களைச் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சமூக வலைதளத்தைப் பயன்படுத்தலாம்.

ஆனால், அளவுக்கு மீறி அதிலேயே மூழ்கிக் கிடப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது அல்ல.வெறுமனே ‘ஸ்க்ரால்’ செய்யாமல் செய்தி களைக் கவனப் படுத்தும் பக்கங்கள், ஒளிப்படங்கள், காணொளிகளுடன் கூடிய விளக்கப் பதிவுகள் அடங்கிய அலைவரிசைகள், புத்தக வாசிப்பு, விளையாட்டுகள் பற்றிய தகவல் வழங்கக்கூடிய பதிவுகள் போன்றவற்றைப் பின்தொடரலாம்.

இதனால் சமூக வலை தளம் வழியே பயனுள்ள விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். எதைப் பார்க்க வேண்டும், எதைப் புறக் கணிக்க வேண்டும் என்பது உங்களுடைய தேர்வாகவே இருக்கும் என்பதால் சமூக வலைதளங்களில் மறைந்திருக் கும் நல்ல விஷயங்களை நீங்கள் தான் தேடிச் செல்ல வேண்டும்.

விவாதக் களம்: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகளில் உங்களது பள்ளி அல்லது கல்லூரி வட்டத்துக்கெனத் தனியே குழு ஒன்றை உருவாக்கி அதில் உரையாடலாம். ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாண வர்கள் ஆகியோரை குழுவில் இணைத்து, ஒரே தளத்தில் அனைவரும் சந்தித்து உரையாட இது ஏதுவாக இருக்கும். வகுப்புக்கு வெளியே வகுப்பு என்பதைப் போல அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே சமூக வலைதளம் வழியே கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம், உரையாடலாம், பயனுள்ள தகவல்களை ஒருவருக்கு இன் னொருவர் பகிரலாம்.

எந்த வொரு தாமதமும் இன்றி நிகழ் நேர அடிப்படை யில் நடப்பு விஷ யங்கள் பற்றிப் பகிரலாம். பாடம், கல்வி தொடர்

பான காணொளிகள், கோப்புகளை இ-மெயிலில் அனுப்புவது போலவே இந்தக் குழுக்களில் அனுப்பும்போது அனைவருக்கும் தகவல் சென்றடைவதற்கான வாய்ப்பு அதிகம்.

திறமைக்கான இடம்: கல்வி மட்டுமல்ல வாசிப்பு, பேச்சு, இசை, நடனம், விளையாட்டு என எந்தத் திறமையா னாலும் அதை மாணவர்கள் வெளிப்படுத்த சமூக வலைதளம் ஒரு நல்ல இடம். நீங்கள் கற்றுக் கொள்வதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், பாராட்டுகளை, விமர்சனங்களைப் பெறவும், உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்ளவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம். சமூக வலைதளம் வழியே சர்வதேச அளவில்கூடப் பரவலாகும் உங்கள் ‘நெட்வொர்க்’ பல வாய்ப்புகள் கிடைக் கவும் வழிவகுக்கும். ஆனால், ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலின்படி பொறுப்போடும் கவனத்தோடும் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது நல்லது.

ஜூன் 30 – சமூக ஊடக நாள்