EBM News Tamil
Leading News Portal in Tamil

சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | samsung galaxy m36 smartphone launched in india price specifications


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதில் சர்க்கிள் டு சர்ச், Gemini லைவ் போன்ற ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்சி எம்36 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே
  • Exynos 1380 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 6ஜிபி / 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5,000mAh பேட்டரி
  • 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இதன் விலை ரூ.17,499 முதல் தொடங்குகிறது