EBM News Tamil
Leading News Portal in Tamil

ஸ்மார்ட்போன் விற்பனையில் ட்ரம்ப் குழுமம்: டி1 மொபைல் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Trump organization in smartphone sales t1 mobile price features


நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பின் குடும்பத்தின் வணிக குழுமமான ட்ரம்ப் குழுமம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் நுழைந்துள்ளது. ட்ரம்ப் மொபைல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டராக இந்த பிராண்ட் இயங்க உள்ளது.

ட்ரம்ப் மொபைல் சார்பில் டி1 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் ட்ரம்ப்பின் மகன்கள் டொனல்டு ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் இணைந்து அறிவித்துள்ளனர்.

கடந்த 2015-ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் பிரச்சாரத்தை முதல் முறையாக தொடங்கினார். அதில் வெற்றி பெற்று 2016-ல் முதல் முறையாக அதிபர் ஆனார். இப்போது இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அதிபர் ஆனார். அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

டி1 மொபைல்: சிறப்பு அம்சங்கள்

  • 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 59 மெகாபிக்சல் பிரதான கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • ஏஐ அம்சங்கள்
  • இந்த போன் தங்க நிறத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இதன் விலை ரூ.42,893
  • இந்த போன் முற்றிலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட உள்ளது