EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | realme c73 smartphone launched in india budget price features


சென்னை: இந்தியாவில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு டி200எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸும் அறிமுகமாகி உள்ளது.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி73 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 6000mAh பேட்டரி
  • 15 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்டும் உள்ளது
  • இந்த போனின் விலை ரூ.10,499 முதல் தொடங்குகிறது