EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்! | google updated g logo in google search nearly a decade time


நியூயார்க்: கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இந்த புதிய லோகோ ஆப்பிள் போன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் போன் பயனர்களுக்கு 12-ம் தேதி முதல் அப்டேட் ஆகியுள்ளது. மற்ற ஆண்டராய்டு போன்களுக்கு விரைவில் இந்த லோகோ அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 2015 செப்டம்பரில் கூகுள் தேடல் லோகோவை கூகுள் அப்டேட் செய்திருந்தது. மாடர்ன் லுக்கில் சான்ஸ்-செரீப் டைப்ஃபேஸில் அது காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுள் தேடல் செயலியில் மட்டுமே இந்த லோகோவை கூகுள் அப்டேட் செய்துள்ளது. உலகம் முழுவதும் மின்னஞ்சல், தேடுபொறி, ஏஐ சாட்பாட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது கூகுள். டெக் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் திகழ்கிறது.