EBM News Tamil
Leading News Portal in Tamil

விவோ T4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள் | vivo t4 smartphone launched in india price features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் ஏராளமான ஏஐ அம்சங்களும் உள்ளன.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்கள் அறிமுகமாகின. தற்போது டி4 வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா. 2 மெகாபிக்சல் கொண்ட கேமராவும் உள்ளது
  • 32 மெகாபிக்சல் கொண்டுளள்து செல்ஃபி கேமரா
  • 7,300mAh பேட்டரி
  • 90 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்ட சார்ஜர்
  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி 2.0
  • 8ஜிபி / 12ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.21,999 முதல் ஆரம்பமாகிறது
  • ஏஐ எரேஸ், ஏஐ போட்டோ என்ஹான்ஸ், லைவ் டெக்ஸ்ட், ஏஐ நோட் அசிஸ்டன்ட், சூப்பர் டாக்குமென்ட்ஸ், சர்க்கிள் டு சேர்ச் மாதிரியான ஏஐ அம்சங்கள் இந்த போனின் இடம்பெற்றுள்ளது