EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆப்பிள் ஐபோன் SE4 இன்று அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரங்கள் | apple iphone se4 launch tonight how much it cost


சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல்.

கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.1 இன்ச் டிஸ்பிளே, ஏ18 ப்ராசஸர், 5ஜி இணைப்பு வசதி, அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஐஓஸ் 18 இயங்குதளம், பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல். இந்தியாவில் இந்த போனின் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இந்திய நேரப்படி இன்று (பிப்.19) இரவு 11.30 மணிக்கு இந்த போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.