EBM News Tamil
Leading News Portal in Tamil

விவோ வி50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள் | vivo v50 smartphone launched in india price specifications


சென்னை: இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஆண்டு வெளியான விவோ வி40 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.77 இன்ச் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • இந்த போனின் பிரதான கேமரா 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது
  • செல்ஃபி கேமராவும் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது
  • 8ஜிபி / 12ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி என மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்டுள்ளது
  • 6,000mAh பேட்டரி
  • 90 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் பெறலாம்
  • இந்த போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது
  • வரும் 25-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை ஆரம்பமாகிறது