EBM News Tamil
Leading News Portal in Tamil

பெண்கள் பாதுகாப்புக்கு செயலி​யுடன் இணைந்த காலணி: உத்தர பிரதேச மாணவர்கள் சாதனை | UP students design SOS sandals for women safety


லக்னோ: பெண்​களின் பாது​காப்​புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர்.

பெண்​களின் பாது​காப்​புக்கு கடந்த 20 ஆண்டு​களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்​சி​யில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்ளன. தற்போது புதுமை கண்டு​பிடிப்பாக பாது​காப்பு அம்சத்​துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். உத்தர பிரதேசத்​தின் மகாராஜ்கன்ஜ் மாவட்​டத்​தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளி​யில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்​வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்​துள்ளனர்.

இந்த காலணி செல்​போன் செயலி​யுடன் இணைக்​கப்​பட்​டுள்​ளது. பெண்​களின் பாது​காப்​புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்​டால், இந்த செருப்​பின் அடியில் உள்ள பட்டனை அழுத்​தினால் போதும், அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை குடும்பத்​தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்​குரிய​வர்​களின் செல்​போனுக்கு அனுப்​பி​விடும். இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்​திருப்​பவரின் இருப்​பிடத்தை கண்டறிய முடி​யும். இதில் உள்ள மைக் மூலம் காலணி அணிந்​திருப்​பவரின் இடத்​தில் நடைபெறும் உரையாடல்களை கேட்க முடி​யும். இந்த காலணி வைத்து தாக்​குதல் நடத்​துபவரை மிதித்​தால், அதில் இருந்து பாயும் மின்​சாரம் தாக்​குதல் நடத்​துபவரை நிலைகுலைய செய்​யும். அதே நேரத்​தில் அணிந்​திருப்​பவருக்கு பாதிப்பை ஏற்படுத்​தாது.

இந்த காலணி குறித்து இதை தயாரித்த மாணவர்கள் கூறுகை​யில், “நாங்கள் உருவாக்கிய செயலி, காலணி​யில் இருந்து செல்​போனுக்கு எச்சரிக்கை தகவல் அளிக்​கும் தொழில்​நுட்​பத்தை இணைக்​கிறது. காலணி​யில் கேமிராவை பொருத்​த​வும் நாங்கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். இதன் மூலம் காலணி அணிந்​திருப்​பவரை சுற்றி என்ன நடைபெறுகிறது என்​பதை அறிய​லாம். பெண்​களின் பாது​காப்பை மன​தில் ​வைத்தே இந்த ​காலணியை நாங்​கள் உரு​வாக்கி​யுள்​ளோம்​” என்​றனர்.