EBM News Tamil
Leading News Portal in Tamil

சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | samsung galaxy s25 smartphone launched in india


சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு கேலக்சி எஸ்25+ மற்றும் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடல் போனும் வெளிவந்துள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஸ்’ வரிசையில் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

கேலக்சி எஸ்25: சிறப்பு அம்சங்கள்

  • கேலக்சி எஸ்25 சீரிஸ் போன்களில் ‘கேலக்சி எஸ்25’ மாடல் போன் பேஸ் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ளது
  • 6.2 இன்ச் டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • குவால்காம் எஸ்எம்8750-ஏபி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
  • 4,000 mAh பேட்டரி
  • 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படவில்லை
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் (ரியர்) உள்ள பிரதான கேமரா
  • 12 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் கேமராவும் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
  • 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • சர்க்கிள் டு சேர்ச் அம்சம்
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
  • இதன் விலை ரூ.80,999 முதல் ஆரம்பமாகிறது