EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் ரியல்மி 14 புரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | realme 14 pro plus smartphone launched in india


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இதோடு சேர்த்து 14 புரோ மாடல் போனையும் ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி 14 புரோ+ சிறப்பு அம்சங்கள்

  • 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50+50+8 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • இதில் பிரதான கேமரா சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சார் கொண்டுள்ளது
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம்
  • 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டுள்ளது
  • 6,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வழங்கப்படுகிறது
  • யுஎஸ்பி டைப்-சி 2.0
  • இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது.