EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oppo reno 13 smartphone launched in india price features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சர்க்கிள் டு சேர்ச், ரிப்ளை, ரீரைட் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.59 இன்ச் டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8350 சிப்செட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 50+8+2 மெகாபிக்சல் என பின்பக்கம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது
  • 5600mAh பேட்டரி
  • இந்த போனுடன் 80 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது
  • ரிவர்ஸ் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 8ஜிபி ரேம்
  • 128 / 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது
  • டைப்-சி யுஎஸ்பி
  • இதன் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது
  • ஒப்போ ரெனோ 13 புரோ மாடல் போன் ரூ.49,999 முதல் விற்பனை ஆகிறது