EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oneplus 13 smartphone launched in india price specs


சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

குவால்கம் ப்ராஸசரில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் இயங்குகிறது. இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக வெளிவந்துள்ளது ப்ரீமியம் மாடல் சீரிஸ் போன் இது. 4 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

  • 6.82 இன்ச் எல்டிபிஓ QHD+ டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி 808 சென்சாரை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 6,000mAh பேட்டரி
  • 100 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டை இந்த போன் கொண்டுள்ளது
  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது
  • 12 ஜிபி ரேம் / 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ், 24 ஜிபி ரேம் / 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.69,999 முதல் ஆரம்பமாகிறது
  • ஒன்பிளஸ் 13ஆர் மாடல் போன் ரூ.42,999 முதல் ஆரம்பமாகிறது