EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் ரெட்மி 14C 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் | redmi 14c smartphone launched in india at budget price


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளது.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14சி 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இது 2025-ம் ஆண்டு இந்தியாவில் சியோமி அறிமுகம் செய்துள்ள முதல் போன் ஆகும். வரும் 10-ம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது. கடந்த 2023 டிசம்பரில் வெளிவந்த ரெட்மி 13சி போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக இது வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.88 இன்ச் ஹெச்டி+ பன்ச் ஹோல் டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 ப்ராசஸர்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்
  • 64 மற்றும் 128ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது
  • மூன்று வண்ணங்களில் இந்த போனை பெறலாம்
  • 5,160mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 33 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வருகிறது
  • டைப்-சி யுஎஸ்பி 2.0
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது