EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் விவோ Y29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | vivo y29 5g smartphone launched in india


சென்னை: இந்தியாவில் விவோ Y29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது விவோ Y29 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. இந்த போனின் பேட்டரி பேக்-அப் திறன் குறித்தும் விவோ சில தகவல்களை பகிர்ந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 19.7 மணி நேரம் வரையில் யூடியூப் லாங் வீடியோ பிளேபேக், 10 மணி நேரத்துக்கு மேலாக பப்ஜி கேம் விளையாடலாம் என தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.68 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 ப்ராசஸர்
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • ஏஐ எடிட்டிங் அம்சங்களுடன் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • ஒரே நேரத்தில் வெவ்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளும் ஸ்பிலிட் ஸ்கிரீன் அம்சமும் இதில் உள்ளது
  • 4ஜிபி / 6ஜிபி / 8ஜிபி ரேம் என மூன்று ரேம் வேரியன்டில் இந்தப் போன் கிடைக்கிறது
  • 128ஜிபி மற்றும் 256ஜிபி என ஸ்டோரேஜ்களில் போனை பெறலாம்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • 5,500mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது