EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | realme gt 7 pro smartphone launched in india price features


சென்னை: இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட்டில் கேம் ஆர்வலர்களை கருத்தில் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது ப்ரீமியம் செக்மென்ட் போனாக சந்தையில் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. 50 மெகாபிக்சல் Sony IMX906 கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5800mAh பேட்டரி
  • 120 வாட்ஸ் அதிவேக சார்ஜர் சப்போர்ட்
  • 37 நிமிடங்களில் போன் 100 சதவீத சார்ஜினை எட்டிவிடும் என ரியல்மி தெரிவித்துள்ளது
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 12ஜிபி / 16ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.59,999 முதல் தொடங்குகிறது