விவோ Y300 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | Vivo Y300 smartphone launched in India
சென்னை: இந்தியாவில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது விவோ Y300 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் விவோ Y300 பிளஸ் மாடல் போன் இந்தியாவில் அறிமுகமான நிலையில் தற்போது அதன் ஸ்டாண்டர்ட் மாடல் வெளிவந்துள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது.
விவோ Y300 சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் AMOLED பன்ச்-ஹோல் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி சப்போர்ட்
- போட்டோ தரத்தை மேம்படுத்தும் ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது
- இந்த போனின் விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது