EBM News Tamil
Leading News Portal in Tamil

ChatGPT Search: இணையதளத்தில் தகவல்களை தேடி பெறலாம் – கூகுளுக்கு போட்டியாக களம் கண்ட ஓபன் ஏஐ | now users can search on chatgpt says open ai


கலிபோர்னியா: இன்றைய இணையதள பயனர்களின் தேடல் என்பது நீண்ட நெடியது. ஒரு நானோ செகண்டுக்குள் கோடான கோடி தேடலை பயனர்கள் தேடி வருகின்றனர். பலரது வரவேற்பினை பெற்ற தேடுபொறியாக கூகுள் இருக்கும் நிலையில் ChatGPT-ல் இணையதள Search-னை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் ChatGPT-ல் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையில் Search-னை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது.

இப்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தும் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் விரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ப்ரிவியூ வெர்ஷன் கடந்த ஜூலையில் SearchGPT என்ற பெயரில் மாதிரி வடிவமாக வெளியாகி இருந்தது. அதனை 10,000-க்கும் குறைவான பயனர்கள் தான் பயன்படுத்த முடிந்தது.

முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் Search செய்யும் வகையில் வடிவமைத்துள்ளதாக பிளாக் பதிவில் ஓபன் ஏஐ நிறுவனம் வியாழன் அன்று தெரிவித்தது. பயனர்கள் தேடும் சோர்ஸ்களுக்கான லிங்க்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் இருக்கும் ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இதோடு சாட்பாட் தரும் தகவல்களையும் இதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கூகுளுக்கு போட்டியாக இந்த இணைய உலகில் களம் கண்டுள்ளது. பயனர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இதன் ரீச் இருக்கும். chatgpt.com மூலம் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் செயலியில் இதனை பயன்படுத்தலாம்.