EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் லாவா ‘அக்னி 3’ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | lava agni 3 smartphone launched in india price features


சென்னை: இந்தியாவில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா அக்னி 3 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 1.74 இன்ச் AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதில் பயனர்கள் சில ஸ்மார்ட்போன் அம்சங்களை பெற முடியும் என லாவா தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் போன்கள் வெளிவரும் நிலையில் லாவா இந்த அம்சத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் பிரதான டிஸ்பிளே
  • 1.74 இன்ச் கொண்டுள்ளது செகண்டரி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300எக்ஸ் சிப்செட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • இரண்டு சிம் பயன்பாடு
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • சைலன்ட் மற்றும் ரிங்கர் மோடில் போனை மாற்றிக் கொள்ள ஆக்‌ஷன் பட்டன் இடம்பெற்றுள்ளது
  • இந்த போனின் விலை ரூ.20,999 முதல் ஆரம்பமாகிறது
  • வரும் 9-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது